உறையூர் சக்திமாரியம்மன் முத்துப்பல்லக்கில் ஊர்வலம்


உறையூர் சக்திமாரியம்மன் முத்துப்பல்லக்கில் ஊர்வலம்
x
தினத்தந்தி 9 July 2023 12:58 AM IST (Updated: 9 July 2023 5:49 PM IST)
t-max-icont-min-icon

உறையூர் சக்திமாரியம்மன் முத்துப்பல்லக்கில் ஊர்வலமாக வந்தார்.

திருச்சி

திருச்சி உறையூர் தெலுங்கு செட்டித்தெருவில் சக்திமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பூச்சொரிதல் பூமிதி விழா கடந்த 5-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு காவிரி ஆறு அய்யாளம்மன்படித்துறையில் இருந்து மேள தாளம், வாணவேடிக்கைகளுடன் அம்மன் முத்துப்பல்லக்கு ஊர்வலம் நடைபெற்றது. விழா குழு தலைவர் சிவகுமார் தலைமை தாங்கினார். இதில் கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நேற்று மாலை 6 மணி அளவில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு தீர்த்தக்குடம், பால்குடம், அக்னிசட்டி முதலியவைகளுடன் அய்யாளம்மன் படித்துறையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சக்திமாரியம்மன் கோவில் முன்பாக போடப்பட்டுள்ள பூமிதியில் இரவு 9 மணிக்கு இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், மாவிளக்கு பூஜையும் நடக்கிறது. 11-ந் தேதி விடையாற்றி நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.


Next Story