மின்வாரிய ஜனநாயக பொது தொழிலாளர் சங்கத்தினர் ஊர்வலம்
மின்வாரிய ஜனநாயக பொது தொழிலாளர் சங்கத்தினர் ஊர்வலம் நடந்தது.
மே தினத்தை முன்னிட்டு நேற்று அகில இந்திய தொழிற்சங்க மய்ய கவுன்சில், தமிழ்நாடு மின்வாரிய ஜனநாயக பொது தொழிலாளர் சங்கம் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு மாநில பொதுச்செயலாளர் பால்ராஜ் தலைமை தாங்கினார். ஊர்வலமானது கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பிருந்து தொடங்கி ஜவகர் பஜார், மனோகரா கார்னர் ரவுண்டானா வழியாக கரூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் வரை சென்றது.
அப்போது மத்திய அரசு மின்சார திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும். 1.12.2019 முதல் பெறவேண்டிய புதிய ஊதிய உயர்வை முழுமையான நிலுவை தொகையுடன் கொடுக்க வேண்டும். நிறுத்தி வைத்துள்ள லீவு சரண்டர் பஞ்சப்படிகளை நிலுவையுடன் வழங்கிட வேண்டும். அவுட்சோர்சிங், ரீடிப்ளாய்மெண்ட் முழுமையாக நிறுத்திட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி பேரணியில் ஈடுபட்டனர். இதில் கிளைத் தலைவர் ராஜமாணிக்கம், பொருளாளர் வீரப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.