குறைந்தபட்ச ஆதார விலையில் பச்சை பயறு கொள்முதல்


குறைந்தபட்ச ஆதார விலையில் பச்சை பயறு கொள்முதல்
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் பச்சை பயறு கொள்முதல் செய்யப்படுகிறது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-

விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைத்திடவும், அவர்களின் வருவாயை பெருக்கிடவும் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி பச்சைப்பயறு சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்கள் விளைவித்த 140 டன் பச்சைப்பயறு பச்சை‌ பயிறு மத்திய அரசின் நாபெட் நிறுவனத்தினால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக வேலூர் விற்பனை குழுவின் கீழ் செயல்படும் காவேரிப்பாக்கம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் முதன்மை கொள்முதல் முகமையாக செயல்பட உள்ளது. மையத்தில் பச்சைப் பயறு ஒரு குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 755 வீதம் வருகிற 29-ந் தேதி (சனிக்கிழமை) வரை கொள்முதல் செய்யப்படவுள்ளது.

விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பச்சைப் பயறுக்கான கிரய தொகை விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்படும். திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு ஆகிய விவரங்களுடன் காவேரிப்பாக்கம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

எனவே இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விவசாயிகள் விளைபொருளுக்கு அதிக விலை பெற்று பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.


Next Story