ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி


ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி
x

ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.

கரூர்

கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் 4,5-ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் 127 ஆசிரியர்களுக்கு குறுவட்டார அளவில் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் உடல் நலம், மனநலம் உள்ளடக்கிய கல்வி என்ற தலைப்பில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டன. பயிற்சியினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, உதவி திட்ட அலுவலர் சக்திவேல் ஆகியோர் பார்வையிட்டு ஆசிரியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர். கரூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சத்யாவதி, அனைத்து ஆசிரிய பயிற்றுனர்கள் பயிற்சியினை ஒருங்கிணைப்பு செய்தனர்.


Next Story