அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 22 Sept 2022 12:15 AM IST (Updated: 22 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை:

உத்தனப்பள்ளி போலீஸ் நிலையம் சார்பில் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிற்றரசு, ரமேஷ் ஆகியோர் போதைப்பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், மன பிரச்சினைகள் குறித்து மாணவ-மாணவிகளுக்கு விளக்கினர். மேலும் ஆபத்து காலத்தில் காவலன் செயலியை பயன்படுத்துவது எப்படி? என்பது குறித்து வீடியோ காட்சிகள் மூலம் விளக்கினர். தொடர்ந்து குழந்தை திருமணம் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


Next Story