தாட்கோ மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சியில் தாட்கோ மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி, மாவட்ட தாட்கோ அலுவலகம் மூலம் மகளிர் வேளாண் நிலம் வாங்கும் திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம், பொருளாதார மேம்பாட்டு திட்டம் ஆகிய திட்டத்தின் கீழ் 24 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 15 லட்சத்து 12 ஆயிரத்து 449 மதிப்பில் கடனுதவி மற்றும் இந்த கடனுக்கான மானியத்தொகை ரூ.33 லட்சத்து 62 ஆயிரத்து 968 வழங்கினார். மேலும் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் கீழ் தமிழ்ச்செல்வன் என்ற மாணவனுக்கு மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி மூலமாக விவசாயத்தில் பயன்படுத்தப்படும் ட்ரோன் பயிற்சி முடித்தமைக்கான சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், மாவட்ட தாட்கோ திட்ட மேலாளர் ஆனந்தமோகன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.