திருவண்ணாமலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி


திருவண்ணாமலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
x

திருவண்ணாமலையில் அமைப்புசாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் சங்கங்களின் பெயர் பலகை, கட்சி கொடியேற்று விழா மற்றும் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தி.மு.க. நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன் தலைமை தாங்கினார். அமைப்புசாரா தொ.மு.ச. மாவட்ட துணை செயலாளர்கள் மெட்ராஸ் கே.சுப்பிரமணி, பு.பாலசுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து அமைப்புசாரா தொ.மு.ச. மாவட்ட செயலாளர் ஏ.ஏ.ஆறுமுகம் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக மருத்துவரணி துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் கலந்துகொண்டு திருவண்ணாமலை கோரிமேட்டு தெரு சந்திப்பில் இருசக்கர வாகன பழுது பார்ப்போர் சங்க பெயர் பலகை திறந்து வைத்து, கட்சி கொடி ஏற்றினார்.

வேட்டவலம் ரோடு திருவள்ளுவர் சிலை அருகில் தையல் கலைஞர்கள் சங்க பெயர் பலகை திறந்து வைத்து, கட்சி கொடி ஏற்றினார். வேங்கிக்கால் இமாலயா ஓட்டல் பக்கத்தில் முடித் திருத்துவோர் அழகு கலைச்சங்கம் சார்பில் பெயர் பலகை திறந்து, கட்சி கொடியை ஏற்றினார். மேலும் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு வேட்டி, சேலை மற்றும் இனிப்புகள் வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பாளர் ப்ரியா விஜயரங்கன், ஒன்றிய செயலாளர் மெய்யூர்.சந்திரன், ஷெரீப், நகர நிர்வாகிகள் இல.குணசேகரன், சீனுவாசன், வேங்கிக்கால் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தமிழ்செல்வன், நகரமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story