குப்பை இல்லா பேரூராட்சியாக மாற்ற உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி
அரகண்டநல்லூரை குப்பை இல்லா பேரூராட்சியாக மாற்ற உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சி
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூர் பேரூராட்சியை குப்பை இல்லாத தூய்மையான பேரூராட்சியாக மாற்றும் வகையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி அரகண்டநல்லூரில் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராயல் எஸ்.அன்பு தலைமை தாங்கினார். துணை தலைவர் கஜிதா பீவி முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் முருகன் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் சுந்தரமூர்த்தி, ஏ.வி.ஆர்.குமார், சரவணன், காமராஜ், முன்னாள் கவுன்சிலர் மொபின்கான், அப்துல்லா, சக்தி மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து துப்புரவு பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் குப்பைகளை சேகரித்து தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story