தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை:பெட்டிக்கடை உரிமையாளர் கைது
தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்ததாக பெட்டிக்கடை உரிமையாளரை போலீசாா் கைது செய்தனா்.
ஈரோடு
கடத்தூர்
கோபியில், ஈரோடு மெயின் ரோட்டில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்கப்படுவதாக, கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் போலீசாருடன் சென்று கடையில் சோதனை நடத்தினார். அப்போது கடைக்குள் 7 பாக்கெட் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பெட்டிக்கடையின் உரிமையாளர் கள்ளிப்பட்டியை சேர்ந்த பரணிதரன் (வயது 44) என்பவரை போலீசார் கைது செய்தனர். புகையிலை பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story