தடைக்காலம் எதிரொலி:ஈரோடு மார்க்கெட்டுக்கு மீன்கள் வரத்து குறைந்தது


தடைக்காலம் எதிரொலி:ஈரோடு மார்க்கெட்டுக்கு மீன்கள் வரத்து குறைந்தது
x

மீன்பிடி தடைக்காலம் எதிரொலி காரணமாக ஈரோடு மார்க்கெட்டுக்கு மீன்கள் வரத்து குறைந்து வஞ்சிரம் மீன் கிலோ ரூ.1,000-க்கு விற்பனை ஆனது.

ஈரோடு

மீன்பிடி தடைக்காலம் எதிரொலி காரணமாக ஈரோடு மார்க்கெட்டுக்கு மீன்கள் வரத்து குறைந்து வஞ்சிரம் மீன் கிலோ ரூ.1,000-க்கு விற்பனை ஆனது.

மீன்பிடி தடைகாலம்

தமிழகத்தில் தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்து வருகிறது. இதனால் மீன் மார்க்கெட்டுகளில் மீன்கள் வரத்து குறைந்து விலை கிடுகிடு என உயர்ந்து வருகிறது. ஈரோடு ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டில் 30-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு கடல் மீன்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பொதுவாக வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை மீன் வாங்க கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் இந்த நாட்களில் மீன்கள் வியாபாரம் சுறுசுறுப்பாக நடக்கும். தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால், கேரளா மாநிலத்தில் இருந்து மட்டும் ஈரோடு மார்க்கெட்டுக்கு மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

விலை விவரம்

பொதுவாக 20 டன் வரை மீன்கள் வரத்தாகி வந்த நிலையில் நேற்று வெறும் 5 டன் மீன்கள் மட்டுமே வரத்தாகி உள்ளது. இதனால் கடந்த வாரத்தை விட நேற்று மீன்கள் ஒரு கிலோவுக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை உயர்ந்தது. ஈரோடு மார்க்கெட்டில் நேற்று விற்பனை செய்யப்பட்ட மீன்களின் விலை கிலோவில் வருமாறு:-

அயிலை -ரூ.250, மத்தி -ரூ.200, வஞ்சிரம் -ரூ.1,000, விளாமீன் -ரூ.500, பாறை -ரூ.500, முரல் -ரூ.400, நண்டு -ரூ.600, கடல் இறால் -ரூ.600, சீலா -ரூ.500, திருக்கை - ரூ.400, வாவல் -ரூ.900, மயில் மீன் -ரூ.500, கிளி மீன் -ரூ.600.


Next Story