போக்குவரத்துக்கு இடையூறாக மோட்டார்சைக்கிள் நிறுத்த தடை


போக்குவரத்துக்கு இடையூறாக மோட்டார்சைக்கிள் நிறுத்த தடை
x

வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக மோட்டார்சைக்கிள் நிறுத்த தடை விதிக்கப்பட்டது.

வேலூர்

வேலூர் அண்ணாசாலை எப்போது பரபரப்பாக காணப்படும். குறிப்பாக பழைய பஸ் நிலையப்பகுதியில் பஸ்கள் உள்ளே சென்றுவருவதால் அடிக்கடி அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படும். பஸ்கள் உள்ளே செல்லும் பாதையில் சிலர் மோட்டார்சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை இடையூறாக நிறுத்திவிட்டு சென்றுவிடுகின்றனர். இதனால் அங்கு அடிக்கடி வாகன நெரிசல், போக்குவரத்து பாதிப்பு ஏற்படும்.

இந்தநிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் அண்ணாசாலையில் சென்றுகொண்டிருந்தபோது பழைய பஸ் நிலையம் திருவள்ளுவர் சிலை அருகே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. சாலையோரம் பயணிகள் நடந்து செல்லமுடியாத வகையில் இருசக்கரவாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்த கலெக்டர் மோட்டார்சைக்கிள்களை அகற்ற போக்குவரத்துதுறை போலீசாருக்கு உத்தரவிட்டார். இனி அங்கு போக்குவரத்துக்கு இடையூறாக மோட்டார்சைக்கிள் நிறுத்தாத வகையில் கண்காணிக்க வேண்டும் என்றும் கூறினார்.


Next Story