புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு தடை உத்தரவு


புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு தடை உத்தரவு
x

புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அரியலூர்

தா.பழூர்:

கடைகளில் ஆய்வு

அரியலூர் மாவட்டம் தா.பழூர் கடைவீதியில் தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு துறை சார்பில் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். இதில் உணவு கட்டுப்பாட்டு துறை நியமன அலுவலர் டாக்டர் வரலட்சுமி தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் ரத்தினம், ஜெயங்கொண்டம் வட்ட வழங்கல் அலுவலர் ஜானகிராமன், தா.பழூர் வருவாய் ஆய்வாளர் தமிழரசன், கிராம நிர்வாக அலுவலர் அய்யப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் 25 கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பல்வேறு கடைகளில் இருந்து, அரசால் தடை செய்யப்பட்ட 12 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு சுமார் ரூ.10 ஆயிரம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அபராதம்

மேலும் அதிக அளவில் புகையிலை பொருட்கள் விற்ற ஒரு கடைக்கு அவசர தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதற்கான ஆணையை கடையின் உரிமையாளரிடம் அதிகாரிகள் வழங்கினர். அந்தக் கடைக்கு நிரந்தர தடை ஆணை பெறப்பட்டு 'சீல்' வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 3 கடைகளுக்கு புகையிலை பொருட்கள் விற்றதற்காக தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story