ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு திட்ட விளக்கக் கூட்டம்
கீழ்பென்னாத்தூரில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு திட்ட விளக்கக் கூட்டம் நடந்தது.
திருவண்ணாமலை
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் தாழ்த்தப்பட்ட பழங்குடியின வகுப்பு மற்றும் கிராம ஊராட்சி மன்ற பெண் தலைவர்களுக்கான திட்ட விளக்கக் கூட்டம் நடந்தது.
வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியன் தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரசண்முகம் வரவேற்றார்.
இதில் பயிற்சி நடத்துனர் ஏழுமலை கலந்து கொண்டு ஊராட்சியில் அனைத்து திட்டப்பணிகளையும் எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்தும், நிர்வாகம் நடத்தும் முறைகள் குறித்தும் பயிற்சி அளித்தார்.
அப்போது ஊராட்சி மன்ற தலைவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. முடிவில் இளநிலை உதவியாளர் காண்டீபன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story