வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திட்ட இயக்குனர் ஆய்வு
கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திட்ட இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.
வேலூர்
வேலூர் மாவட்ட திட்ட இயக்குனர் ஆர்த்தி கே.வி.குப்பம் ஊராட்சியில் உள்ள குறிஞ்சி நகரில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுவரும் சிமெண்டு சாலைகள், ஆலங்கநேரி ஊராட்சியில் அமைக்கப்பட்டு வரும் நெற்களம், சோழமூர் ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் ரேஷன் கடை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
முன்னதாக கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் த.கல்பனா, பெ.மனோகரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story