தரிசுகளை விளைநிலங்களாக மாற்றும் திட்டம்


தரிசுகளை விளைநிலங்களாக மாற்றும் திட்டம்
x

விளாத்திகுளம் அருகே தரிசுகளை விளைநிலங்களாக மாற்றும் திட்டம் தொடங்கப்பட்டது.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே தரிசு நிலங்களை, விளை நிலங்களாக மாற்றும் வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தை நேற்று தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.

விளைநிலங்களாக...

வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2021-2022-ன் கீழ் தரிசு நிலத்தை விளைநிலங்களாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் விளாத்திகுளம் அருகே உள்ள மந்திகுளம் கிராமத்தில் 19 ஏக்கர் பரப்பளவு கொண்ட தரிசு நிலத்தை விளை நிலமாக மாற்றும் வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த நிலப்பகுதியை நேற்று கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார். விவசாய நிலமாக மாற்றுவது குறித்து வேளாண் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் இந்த திட்டத்தை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.

விவசாய உபகரணங்கள் வழங்கல்

இந்த திட்டத்தில் மந்திகுளம் கிராமத்தைச் சேர்ந்த 15 பயனாளிகளின் 19 ஏக்கர் தரிசு, விவசாய நிலமாக பயன்படுத்த உள்ளது. அந்த விவசாயிகளுக்கு மருந்தடிக்கும் எந்திரம் உட்பட விவசாய உபகரணங்களை கலெக்டர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர், விளாத்திகுளம் வேளாண்மை உதவி இயக்குனர், தாசில்தார், வேளாண்மை துறை அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், விவசாயிகள், கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story