திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்


திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
x
தினத்தந்தி 14 Dec 2022 12:15 AM IST (Updated: 14 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

ஆய்வுக்கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், ஊரக வளர்ச்சி வளர்ச்சித்துறை சார்பாக திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். இதில் கூடுதல் கலெக்டரும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனருமான வசந்தனா கார்க், ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் மலர்விழி, உதவி திட்ட அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், 2021-22-ம் நிதியாண்டில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 10 ஊராட்சி ஒன்றியங்களில் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் நடைபெற்று வரும் பணிகள், நமக்கு நாமே திட்டம், சமூக பொருளாதார மேம்பாட்டுத்திட்டம், ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டம், ஜல்ஜீவன் திட்டம், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா வீடு வழங்கும் திட்டம், பசுமை வீடுகள் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

விரைந்து முடிக்க வேண்டும்

மேலும் பழங்குடியினர் நலத்திட்டம் (தெரு விளக்கு, குடிநீர் பணிகள்), பிராதான் மந்திரி ஆதர்ஸ் யோஜனா திட்டம், ஒருங்கிணைந்த பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டம், தன்னிறைவு திட்டம், தேசிய கிராம சுயாட்சி திட்டம், சான்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா, குளங்கள் மற்றும் ஏரிகள் தூர்வாருதல் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து பள்ளி சமையறை கட்டுதல், தூய்மை பாரத இயக்கம், கிராம சாலைகள் மற்றும் பாலங்கள், குடிநீர் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் கலெக்டர் பேசியதாவது:-

மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும். மேலும், புதிய திட்ட பணிகளை உடனே தொடங்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story