ரூ.42.65 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா
விளாத்திகுளம் அருகே ரூ.42.65 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே வாதலக்கரை கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.42.65 லட்சம் மதிப்பீட்டில் கிராம நிர்வாக அலுவலர் கட்டிடம், ஊராட்சி மன்ற தலைவர் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுவிழா நடந்தது.
புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார் தலைமை தாங்கினார். புதூர் கிழக்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் செல்வராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இமானுவேல், வாதலக்கரை ஊராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் பொறியாளர் அலெக்ஸ், ஒன்றிய பிரதிநிதி சிவலிங்கம், தி.மு.க. கிளைச் செயலாளர் முருகப்பெருமாள், புதூர் பேரூராட்சி மன்ற கவுன்சிலர் வெற்றிவேலன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.