பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

சிவகாசியில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி பராசக்தி காலனியில் தனியார் மதுக்கடை திறக்க ஏற்பாடு நடந்து வரும் நிலையில் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இந்த மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த மதுக்கடைக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்தநிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விருதுநகர் மத்திய மாவட்ட தலைவர் டேனியல் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் திலகபாமா முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் செல்வன், தெற்கு மாநகர செயலாளர் வைரவேல், வடக்கு மாநகர செயலாளர் கணேஷ்பிரபு, இளைஞரணி செயலாளர் செல்வக்குமார், மாநகர இளம்பெண் செயலாளர் சாந்தாதேவி, பாட்டாளி மக்கள் கட்சியினரும், ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர்.



Next Story