பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்

போதைப்பொருள், கஞ்சா மற்றும் மது விற்பனையை தடை செய்ய வலியுறுத்தி நேற்று கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள கோவை ரோட்டில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் பிரேம்நாத் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் ராக்கி முருகேசன், மாநில துணைத்தலைவர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள் தமிழக அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.


Next Story