மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் 100 சதவீதம் நிறைவேற்றப்படும்
திருவாரூர் ஒன்றியத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் 100 சதவீதம் நிறைவேற்றி தரப்படும் என ஒன்றியக்குழு தலைவர் புலிவலம் தேவா கூறினார்.
திருவாரூர்;
திருவாரூர் ஒன்றியத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் 100 சதவீதம் நிறைவேற்றி தரப்படும் என ஒன்றியக்குழு தலைவர் புலிவலம் தேவா கூறினார்.
ஒன்றியக்குழு கூட்டம்
திருவாரூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் புலிவலம் தேவா தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணைத்தலைவர் தியாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணியன், புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவபிரகாசம் தீர்மானங்கள் வாசித்தார். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பேசினர். இதன் விவரம் வருமாறு:-முருகேசன் (தி.மு.க.) : தியானபுரம் சாலை மிகவும் பழுதடைந்து போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் குண்டு- குழியுமாக உள்ளது. இந்த சாலையை உடனடியாக சீரமைத்து தர வேண்டும். தியானபுரத்தில் ஈமக்கிரிகை மண்டபம் கட்டித்தர வேண்டும். வாழவாய்க்கால் கரைகளில் உள்ள 2 சுடுகாடுகள் செல்லும் சாலைகளை புதுப்பித்து தர வேண்டும்.
சாலை சீரமைப்பு
குணசேகரன் (தி.மு.க.) :திருவாதிரைமங்கலம் சவுரிராஜன் கட்டளை பாப்பாலம்மன் கோவில் சாலை பழுதடைந்து பயனற்ற நிலையில் உள்ளதை விரைந்து சீரமைத்து தர வேண்டும்.சிவக்குமார் (தி.மு.க.) : கூடூர் ஊராட்சி கீழகூத்தங்குடி செல்லும் சாலையில் உள்ள கல்வெட்டு பழுதடைந்துள்ளது. இதை புதிதாக கட்டித் தர வேண்டும். 3-வது வார்டு மயான சாலையை சீரமைக்க வேண்டும். மாங்குடி அகரசாத்தங்குடி அங்காளம்மன் கோவில் சாலையை சீரமைக்க வேண்டும்.
நிறைவேற்றப்படும்
வசந்தா (கம்யூனிஸ்டு) புதூர் ஊராட்சியில் பழுதடைந்த சாலைகளை சீரமைத்திட வேண்டும்.துணைத்தலைவர்:- பதவி காலம் என்பது 4 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற போதிய நிதியை ஒன்றியக்குழு தலைவர் பெற்றுத்தர வேண்டும்.தலைவர்: வருகிற 15-ந் தேதி அண்ணா பிறந்தநாளன்று மகளிர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்க உள்ள தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு ஒன்றியத்தின் சார்பில் பாராட்டுதலையும், நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.திருவாரூர் ஒன்றியத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் 100 சதவீதம் நிச்சயம் நிறைவேற்றி தரப்படும். நான் முதல்வர் திட்டத்தின் கீழ் ரூ.12 கோடிக்கு சாலை பணிகள் நடைபெறுகிறது. திருவாரூர் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பின்னவாசல் பஸ் நிழற்குடை கட்டிட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.