விதிமீறல்களை கண்டறியும் பட்டாசு ஆலைகள் மீது உடனடி நடவடிக்கை


விதிமீறல்களை கண்டறியும் பட்டாசு ஆலைகள் மீது உடனடி நடவடிக்கை
x

வெடி விபத்துகளை தவிர்க்க விதிமீறல்களை கண்டறியும் பட்டாசு ஆலைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்


வெடி விபத்துகளை தவிர்க்க விதிமீறல்களை கண்டறியும் பட்டாசு ஆலைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

வெடி விபத்து

தாயில்பட்டி கணஞ்சாம்பட்டியில் 4 பேரை பலி கொண்ட வெடி விபத்து நடந்த பட்டாசு ஆலையில் விபத்து நடப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு தான் மாவட்ட நிர்வாகத்தின் ஆய்வு குழுவினர் ஆய்வு செய்து விதிமீறலை கண்டறிந்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. விதிமீறலை கண்டறிந்தவுடன் உடனடியாக அங்கிருந்து தொழிலாளர்களை வெளியேற்றி இருந்தால் வெடி விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும்.

வழக்கமான நடைமுறைப்படி ஆய்வு குழுவினர் விதிமுறைகளை கண்டறிந்தால் அதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்பி மாவட்ட நிர்வாகம் அதனை பதிவு செய்து சம்பந்தப்பட்ட பட்டாசு ஆலையின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு கால தாமதம் ஏற்படும் நிலை உள்ளது. அதற்குள் பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

முறையான ஆய்வு?

விதி மீறலை கண்டறிந்தவுடன் உடனடியாக பட்டாசு ஆலையில் உற்பத்தி நிறுத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டால் வெடி விபத்துகள் தவிர்க்கப்படும். மேலும் மாவட்ட நிர்வாகத்தின் ஆய்வு குழுக்கள், போலீசார், வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை என பல்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டும் வெடி விபத்துகள் நடைபெறும் நிலை உள்ளதால் முறையான ஆய்வுகள் நடத்தப்படுகிறதா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் மாவட்டத்தை விபத்து இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்றால் பட்டாசு ஆலைகளில் விதிமீறல்கள் கண்டறியப்படுவதில் தீவிரம் காட்டப்படுவதுடன் விதிமீறல்கள் உள்ள ஆலைகள் மீது தாமதப்படுத்தாமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பை முற்றிலுமாக தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியமாகும்.


Next Story