சிறப்பு மனு விசாரணை முகாமில் 65 மனுக்களுக்கு உடனடி தீர்வு
பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு மனு விசாரணை முகாமில் 65 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின் பேரில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் சிறப்பு மனு விசாரணை முகாம் நடத்தப்பட்டது. இந்த சிறப்பு மனு விசாரணை முகாமில் பெரம்பலூர் -21, பாடாலூர் -3, மருவத்தூர்- 6, அரும்பாவூர்- 12, அனைத்து மகளிர் காவல்நிலையம் -10, குன்னம் 8, மங்களமேடு-18, வி.களத்தூர் 5, கை.களத்தூர் -4 என மொத்தம் 87 மனுக்கள் பெறப்பட்டு அதில் 65 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 22 மனுக்களின் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story