இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பிரசார இயக்கம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பிரசார இயக்கம்
x
தினத்தந்தி 8 May 2023 12:15 AM IST (Updated: 8 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தில்லையாடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பிரசார இயக்கம் நடந்தது

மயிலாடுதுறை

பொறையாறு:

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத பி.ஜே.பியை மத்திய ஆட்சியில் இருந்து அகற்றுவோம், மக்களையும் நாட்டையும் பாதுகாப்போம் மாற்றத்தை நோக்கி என்கிற முழக்கத்தை முன்வைத்து மக்கள் சந்திப்பு நடைப்பயண பிரசார இயக்கத்தை பொறையாறு அருகே தில்லையாடியில் தொடங்கினர். இயக்கத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். செயற்குழு உறுப்பினர் வேதநாயகம் வரவேற்றார். இதில் மாவட்ட துணைச் செயலாளர் ராமன், நடைப்பயண பிரசாரத்தை தொடங்கி வைத்து பேசினார். இந்த நடைப்பயண பிரசாரத்தில் முன்பு ரூ.450க்கு விற்ற சமையல் கியாஸ் சிலிண்டர் தற்போது ரூ.1400க்கும், பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்து அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பி.ஜே.பியை ஒன்றிய ஆட்சியில் இருந்து அகற்றுவோம் என்று முழக்கமிட்டனர். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.


Next Story