இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பிரசார இயக்கம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பிரசார இயக்கம்
x

திருப்பத்தூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பிரசார இயக்கம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்தியில் பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து அகற்றுவோம், நாட்டையும் மக்களையும் பாதுகாப்போம் நடை பயண பிரசார இயக்கம் திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு, வாணியம்பாடி மெயின் ரோடு, தூய நெஞ்சக் கல்லூரி, திருப்பத்தூர் கோட்டை தெரு, ஆலமரப் பகுதி ஆகிய இடங்களில் இருந்து தனித்தனியாக மாவட்ட செயலாளர் சுந்தரேசன் தலைமையில் நடந்தது.

நடை பயணமாக மாற்றத்தை நோக்கி என்ற துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி திருப்பத்தூர் பழைய பஸ் நிலையம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போது நூற்றுக்கணக்கான பொதுத்துறை நிறுவனங்கள் அதானி, அம்பானி மற்றும் அன்னிய கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விற்கப்பட்டுள்ளது. ஜனநாயக உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு சர்வாதிகாரத்தை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது என கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர்கள் சாமிக்கண்ணு, நந்தி, ஒன்றிய செயலாளர் அண்ணாமலை, நகர செயலாளர் முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story