வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் சிலம்பரசன் (வயது 36). இவர் அதே ஊரை சேர்ந்த அண்ணாமலை மகன் மணிகண்டனை (26) வழிமறித்து மது போதையில் தகராறு செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அவரை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தா.பழூர் போலீசில் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire