வாட்ஸ்-அப் குழுவை உருவாக்கி வீட்டில் விபசாரம்; 2 அழகிகள் மீட்பு


வாட்ஸ்-அப் குழுவை உருவாக்கி வீட்டில் விபசாரம்; 2 அழகிகள் மீட்பு
x
தினத்தந்தி 7 May 2023 12:15 AM IST (Updated: 7 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம் அருகே வாட்ஸ்-அப் குழுவை உருவாக்கி வீட்டில் விபசாரம் நடந்தது போலீஸ் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக வியாபாரி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். 2 அழகிகள் மீட்கப்பட்டனர்.

கன்னியாகுமரி

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே வாட்ஸ்-அப் குழுவை உருவாக்கி வீட்டில் விபசாரம் நடந்தது போலீஸ் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக வியாபாரி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். 2 அழகிகள் மீட்கப்பட்டனர்.

அதிரடி சோதனை

குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்து அழகிகளை வைத்து விபசாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதைதொடர்ந்து இதுபற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண்பிரசாத் உத்தரவிட்டார். இதைதொடர்ந்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அதன்படி கன்னியாகுமரி, சுசீந்திரம், ஆரல்வாய்மொழி ஆகிய பகுதிகளில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி விபசாரத்தில் ஈடுபட்ட பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். ஒருவரை கைது செய்தனர்.

வீட்டில் விபசாரம்

இந்தநிலையில் குழித்துறை பகுதியிலும் விபசாரம் நடைபெறுவதாக மார்த்தாண்டம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் பம்மம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அதிரடியாக சோதனை செய்தனர்.

சோதனையின்போது அங்கு 2 அழகிகள் விபசாரத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர்களுடன் 4 பேர் இருந்தனர். அப்போது போலீசாரை கண்டதும் ஒருவர் தப்பியோடிவிட்டார்.

வாட்ஸ் அப் குழு அமைத்து...

இதையடுத்து போலீசார் 2 அழகிகள் உள்பட 5 பேரையும் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

விசாரணையில், அழகிகளில் ஒருவர் பெங்களூரையும், மற்றொருவர் தஞ்சாவூரையும் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியது பெரியவிளையை சேர்ந்த மர வியாபாரியான சுனில் அப்பலோஸ் (வயது 45), குழித்துறையை சேர்ந்த ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான நாராயணன் நாயர்(59) என்பதும் தெரியவந்தது.

சுனில் அப்பலோஸ் வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் நடத்தி வந்துள்ளார். மேலும், அவர் மர வியாபாரி என்பதால் தனக்கு தெரிந்த வியாபாரிகள், முக்கிய வி.ஐ.பி.க்களை அந்த வீட்டுக்கு அழைத்து வந்து பெண்களிடம் உல்லாசமாக இருக்க ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக வாட்ஸ் அப் குழுவை தொடங்கி முதலில் தங்களுக்கு தெரிந்த நபர்கள் முக்கிய வி.ஐ.பி.க்களை வாடிக்கையாளர்களாக சேர்த்துள்ளனர்.

கூகுள் பே மூலம்

பின்னர் அவர்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி அழகிகள் இருக்கும் இடத்துக்குஅங்கு வரவழைத்துள்ளனர். பணம் தராமல் ஏமாற்றி விடாமல் இருக்க கூகுள்பே மூலம் முதலில் பணத்தை பெற்று உறுதி செய்த பிறகுதான் அவர்களை நம்பியுள்ளனர். குறைந்தபட்சம் ரூ.2 ஆயிரம் முதல் வசூலித்துள்ளனர். ஒரு சிலர் ரூ.25 ஆயிரம் வரை கூகுள் பே செய்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. அதைதொடர்ந்து மீட்கப்பட்ட அழகிகள் 2 பேரையும் போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

3 பேர் கைது

மேலும் இதுதொடர்பாக சுனில் அப்பலோஸ், நாராயணன் நாயர், காஞ்சிரகோட்டை சேர்ந்த ஜோபின் (25), பரக்குன்றை சேர்ந்த தாஸ் (42) ஆகிய 4 பேர் மீது போலீசார் விபசார தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதில் தாஸை தவிர மற்ற 3 பேரையும் கைது செய்தனர்.


Next Story