மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கடமலைக்குண்டுவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தேனி
கடமலை-மயிலை ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கடமலைக்குண்டுவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வரும் கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாகவும், அங்கு பெண்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமையை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு ஒன்றிய செயலாளர் போஸ் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க தேனி மாவட்ட செயலாளர் கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். இதில், கட்சி நிர்வாகிகள், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டு, மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story