கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்


கிருஷ்ணகிரியில்  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
x

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணணிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நடராஜன் கோரிக்கைகள் குறித்து பேசினார். இதில் பிற சங்கங்களை சேர்ந்த சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் நஞ்சுண்டன், சக்திவேல், சரவணன், ஆனந்தன், சிவலிங்கம், சுரேஷ், சதீஷ், வெங்கடேசன், சுரேஷ்குமார் உள்பட பலர் பேசினர். வங்கி ஊழியர் சங்க மாநில உதவி தலைவர் ஹரிராவ் பேசினார். முடிவில் மாவட்ட பொருளாளர் தேவராஜ் நன்றி கூறினார்.

இந்த போராட்டத்தின் போது, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தை கலைத்து, தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து சந்தாதாரர்களையும் வரையறுக்கப்பட்ட பயனளிப்பு ஓய்வூதிய முறையின் கீழ் கொண்டுவர வேண்டும். அகவிலைப்படி, சரண் விடுப்பு, வருங்கால வைப்பு நிதி வட்டி குறைப்பு உள்ளிட்ட கொரோனா தொற்று காலத்தில் பறிக்கப்பட்ட சலுகைகளை உடனே வழங்க வேண்டும். புதிய கல்வி கொள்கைகயை கைவிட வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி, பொது வினியோக முறையை சீர்படுத்த வேண்டும் என்பது உளளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story