நவனியில் தனியார் நிறுவன தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


நவனியில்  தனியார் நிறுவன தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

நவனியில் தனியார் நிறுவன தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்

நாமக்கல்:

புதுச்சத்திரம் அருகே உள்ள நவனியில் பிளாஸ்டிக் குடிநீர் டேங்குகளை தயாரிக்கும் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்கள் நீண்ட நாட்களாக ஊதிய உயர்வு கேட்டு வந்தனர். இந்த நிலையில் கோரிக்கையை வலியுறுத்தி தனியார் நிறுவன தொழிலாளர்கள் நேற்று ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ஊதிய உயர்வு கேட்டு அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேலை நிறுத்த போராட்டத்தை ஏ.ஐ.டி.யு.சி‌. மாவட்ட தலைவர் மணிவேல் தொடங்கி வைத்து பேசினார். இதில் ராசிபுரம் நகர செயலாளர் மணிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனிடையே தொழிலாளர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நிறுவனத்தினர் முன்வர வேண்டும் என அவர்கள் கேட்டு கொண்டனர்.


Next Story