செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் காத்திருப்பு போராட்டம்
செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் காத்திருப்பு போராட்டம்
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் ஒன்றியம் பாதரை ஊராட்சி மன்ற செயலாளர் சரவணன் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக கூறி உறுப்பினர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். இதனிடையே அவர்கள் கடந்த 26-ந் தேதி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்தநிலையில் அதிகாரிகள் கூறியபடி ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, ஊராட்சி அலுவலகம் முன்பு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று மீண்டும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தன் மற்றும் பள்ளிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் விசாரணை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.