ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை

சிவகங்கை,

ரேஷன் கடை பணியாளர்களுக்கு கடந்த 5 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை உயர்த்த வேண்டும், பொதுவினியோகத் திட்டத்திற்கான தனித்துறையை உருவாக்க வேண்டும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கும் வகையில் சரியான எடையில் பொருட்கள் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் 4 கட்ட போராட்டத்தை அறிவித்துள்ளனர்.இதில் முதல்கட்டமாக மாவட்ட தலைநகரங்களில் நேற்று ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநில பொதுச்செயலாளர் கே.ஆர்.விசுவநாதன் தலைமை தாங்கினார். சிவகங்கை மாவட்ட தலைவர் எஸ்.எம். மாயாண்டி, மாவட்டச் செயலர் திருஞானம், மாவட்டப் பொருளாளர் இளமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆா்ப்பாட்டத்தி்ல் சிவகங்கை நகர் தலைவர் கவுரிசங்கர், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் முருகன் உள்பட ஏராளமான ரேஷன் கடைப் பணியாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். பின்னர் மாநில பொது செயலாளர் விஸ்வாதன் கூறியதாவது:-

தமிழக அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் எங்களின் நியாயமான கோரிக்ககைளை நிறைவேற்ற கோரி 4 கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளோம். முதல் கட்ட போராட்டமாக மாவட்ட தலைநகரங்களில் நேற்று ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.2-வது கட்டமாக இன்று (புதன்கிழமை) கோட்டஅளவில் ஆர்ப்பாட்டமும் 3-வது கட்டமாக நாளை (வியாழக்கிழமை) வட்டஅளவில் ஆர்ப்பாட்டமும் நடைபெறும். வருகிற 10-ந்தேதி சென்னையில் காத்திருக்கும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story