கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் செல்போன்களை அதிகாரியிடம் ஒப்படைக்க முடிவு-செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்


கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் செல்போன்களை அதிகாரியிடம் ஒப்படைக்க முடிவு-செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
x

கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் செல்போன்களை அதிகாரியிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.

நாமக்கல்

நாமக்கல்:

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நாமக்கல்லில் உள்ள கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாண்டிமாதேவி தலைமை தாங்கினார். இதில் மாநில துணை தலைவர் ஜெயக்கொடி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு சார்பில் கொடுக்கப்பட்ட செல்போன்களை வருகிற 29-ந் தேதி குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலரிடம் ஒப்படைப்பது, 30-ந் தேதி இயக்குனர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்துவது, காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்துவது, அங்கன்வாடி ஊழியர்களை பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க கோருவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட செயலாளர் பிரேமா, பொருளாளர் கலா உள்பட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story