காதுகேளாதோர் விசில் ஊதி காத்திருப்பு போராட்டம்
ராமநாதபுரத்தில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காதுகேளாதோர் சங்கத்தினர் விசில் ஊதி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரத்தில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காதுகேளாதோர் சங்கத்தினர் விசில் ஊதி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்ட காதுகேளாதோர் சங்கத்தின் சார்பில் அரசு துறையில் 1 சதவீதம் வேலைவாய்ப்பு, தனியார் துறையில் வேலை வாய்ப்பு, மாத உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்துவது, வாரிசு அடிப்படையில் மாற்றுத் திறனாளிக்கு வேலை, காதுகேளாதோர் கூட்டமைப்பினரை நல வாரியத்தில் பிரதிநிதியாக அமைத்தல் போன்ற 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் ரெத்தினம் முன்னிலை வகித்தார். தலைவர் ரவிசங்கர் கோரிக்கைகளை விசில் மூலம் விளக்கி கூறினார். இந்த காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட காதுகேளாதோர் பலர் வாய்பேசமுடியாதவர்கள் என்பதால் தங்களின் கோரிக்கைகளை விசில் அடித்து கூறினர்.
விசில் சத்தம்
இதனால் கலெக்டர் அலுவலக வளாக பகுதி முழுவதும் விசில் சத்தமாக கேட்டது. முடிவில் பொருளாளர் நன்றி கூறினார்.