நாமக்கல்லில் சாலை பராமரிப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


நாமக்கல்லில் சாலை பராமரிப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

நாமக்கல்லில் சாலை பராமரிப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்

நாமக்கல்:

சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணி ஓய்வுக்கு பின்பு பணி கொடைக்கும், ஓய்வூதிய பலன்களுக்கும் பொருந்த கூடிய வகையில் அரசாணை வெளியிட வேண்டும். தமிழகத்தில் உள்ள மாநில சாலைகள், மாவட்ட சாலைகள் மற்றும் இதர சாலைகளை தனியார் பராமரிப்புக்கு வழங்குவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் கோட்டபொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் பாலசுப்பிரமணி, மாநில தணிக்கையாளர் மணிவண்ணன், மாவட்ட நிர்வாகிகள் கண்ணன், கந்தசாமி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது சாலைகளை பராமரிக்க 5 கி.மீட்டருக்கு 2 சாலைப்பணியாளர்களை நியமிக்க வேண்டும். பணிநீக்க காலத்தில் இறந்த சாலைபணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் விதிமுறைகளை தளர்த்தி பணி நியமனம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.


Next Story