விசுவ இந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்
விசுவ இந்து பரிஷத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிங்கம்புணரி,
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் டெய்லர் கன்னையாலாலை படுகொலை செய்த பயங்கரவாதிகள் மீதும், அதற்கு பின்புலமாக செயல்பட்டவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அரசு மற்றும் ராஜஸ்தான் மாநில அரசை வலியுறுத்தி விசுவ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் சார்பில் சிங்கம்புணரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விசுவ இந்து பரிஷத் முன்னாள் மாநில செயலாளர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில சேவா பொறுப்பாளர் ராம கருப்பணன், மாவட்ட செயல் தலைவர் ராமகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் அழகப்பன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். இதில், இந்து முன்னணி மாவட்ட பொது செயலாளர் அக்னி பாலாஜி, பா.ஜ.க. முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் செந்தில்குமார், ஆர்.எஸ்.எஸ். ஒன்றிய தலைவர் குகன், மண்டல பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன், விசுவ இந்து பரிஷத் மாவட்ட பொருளாளர் நடராஜன், ராமசாமி, முத்துக்குமார், பாலமுருகன், முருகன், இளையராஜா, மகளிர் பொறுப்பாளர் செந்தில்குமாரி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். மாவட்ட பஜ்ரங்தள் அமைப்பாளர் தங்கபாண்டியன் நன்றி கூறினார்.