பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்


பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
x
சிவகங்கை

திருப்பத்தூர்,

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தமிழக அரசின் மின்கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி பா.ஜ.க. சார்பில் மாவட்ட அளவிலான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மேப்பல்சக்தி தலைமை தாங்கினார்.

மாவட்ட பொது செயலாளர்கள் நாகராஜன், மார்த்தாண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பா.ஜ.க.வின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் மகாலட்சுமி சிறப்புரையாற்றினார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் சொக்கலிங்கம், மாநில ஓ.பி.சி. அணி செயற்குழு உறுப்பினர் நாகேஸ்வரன், முன்னாள் செயற்குழு உறுப்பினர் சேதுசிவராமன், மூத்த நிர்வாகி ராம.சகாதேவன், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக திருப்பத்தூர் தொகுதி சட்டமன்ற பொறுப்பாளரும், மாவட்ட பொதுச் செயலாளருமான முருகேசன் வரவேற்றார். முடிவில் திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய தலைவர் தங்கபாண்டி நன்றி கூறினார்.



Next Story