நாமக்கல்லில் தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்
நாமக்கல் நகர தமிழ்ப்புலிகள் கட்சியின் துணை செயலாளராக இருந்து வருபவர் அக்பர். இவர் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக சமூக வலைதளங்களில் கண்டன பதிவுகளை வெளியிட்டார். இவை சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக கூறி நாமக்கல் போலீசார் அவரை கைது செய்தனர்.
அவர் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், அவர் மீது போலீசார் பொய் வழக்கு போட்டு இருப்பதாகவும் கூறி நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய மாவட்ட செயலாளர் கோபி தலைமை தாங்கினார். நகர செயலாளர் உமா மகேஷ்வரன் வரவேற்று பேசினார். இதில் மாவட்ட செயலாளர்கள் கார்த்தி, வினோத் சேகுவேரா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story