பொதுமக்களுக்கு அல்வா கொடுக்கும் நூதன ஆர்ப்பாட்டம்


பொதுமக்களுக்கு அல்வா கொடுக்கும் நூதன ஆர்ப்பாட்டம்
x

பொதுமக்களுக்கு அல்வா கொடுக்கும் நூதன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராமநாதபுரம்


கீழக்கரையில் அரசு மருத்துவமனையை மேம்படுத்த கோரியும், சட்டமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத சட்டமன்ற உறுப்பினரை கண்டித்தும் பொதுமக்களுக்கு அல்வா கொடுக்கும் நூதன போராட்டம் கீழக்கரை இந்து பஜார் அருகில் நடைபெற்றது. போராட் டத்திற்கு வீரகுல தமிழர் படை ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். பெரியார் பேரவை தலைவர் நாகேசுவரன், ஆதி தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் வேந்தை சிவா, கீழக்கரை நகர் செயலாளர் பாசித் இலியாஸ், எல்.ரெட் ஸ்டார் மாவட்ட செயலாளர் யோகேஸ்வரன், இந்திய தவ்ஹித் ஜமாத் மாவட்ட பேச்சாளர் செய்யது ஜமாலி, மனிதநேய ஜனநாயக கட்சி சையது இபுராகிம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். வீரகுல தமிழர்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மதுகணேஷ், பழனி முருகன், அஜித் குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story