எண்ணேகொள்புதூர் நீர் ஆதார கால்வாய் திட்டப்பணிகள்: வேளாண்மையை பாதிக்காத வகையில் செயல்படுத்த கோரி விவசாயிகள் போராட்டம்


எண்ணேகொள்புதூர் நீர் ஆதார கால்வாய் திட்டப்பணிகள்: வேளாண்மையை பாதிக்காத வகையில் செயல்படுத்த கோரி விவசாயிகள் போராட்டம்
x

எண்ணேகொள்புதூர் நீர் ஆதார கால்வாய் திட்டப் பணிகளை வேளாண்மையை பாதிக்காத வகையில் செயல்படுத்த கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் எண்ணேகொள்புதூர் நீர் ஆதார கால்வாய் திட்டப்பணிகளை விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் மாற்றுப்பாதை வழியாக செயல்படுத்தக்கோரி, விவசாயிகள் வாழ்வுரிமைக்கான போராட்ட கூட்டமைப்பு சார்பில், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டம் நடந்தது.

இதற்கு ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின்பாபு தலைமை தாங்கினார். போராட்ட கூட்டமைப்பு தலைவர் பச்சியப்பன், செயலாளர் நந்திபெருமாள், துணைத்தலைவர்கள் ஆறுமுகம், சரவணன், சந்தோஷ், துணை செயலாளர்கள் சின்னப்பன், சங்கர், பிலால், பொருளாளர் ஏகாம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், விவசாய தொழிலாளர் சங்க மத்திய குழு உறுப்பினர் ராமிசெட்டி வெங்கடய்யா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில், 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story