கிருஷ்ணகிரி, அஞ்செட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி, அஞ்செட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக் குழு உறுப்பினரான வீரபாண்டியனை பயங்கர ஆயுதங்களால் தாக்க முயன்றவர்களை கைது செய்யக்கோரி கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை முன்பு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநிலக்குழு உறுப்பினர் கண்ணு தலைமை தாங்கினார். நகர செயலாளர் உபேத் முன்னிலை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, சக்கரவர்த்தி, மோகன், காளியப்பன், பெருமாள், சுபத்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஷாஜகான் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில், மாநிலக்குழு உறுப்பினர் கண்ணு பேசியதாவது:- இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் வீரபாண்டியனை வியாசர்பாடியில் அவரது வீட்டில் இருந்து வெளியில் நடந்து சென்ற போது, மர்ம நபர்கள் சிலர் பயங்கர ஆயுதங்களால் தாக்க முயன்றனர். ஆனால் பொதுமக்கள் குவிந்ததால், அவர்கள் தப்பித்து சென்று விட்டனர். எனவே வீரபாண்டியனை தாக்க முயன்றவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்றார்.
அஞ்செட்டி
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக் குழு உறுப்பினரான வீரபாண்டியனை தாக்க முயன்றவர்களை கைது செய்யக்கோரி அஞ்செட்டி பஸ் நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு அஞ்செட்டி வட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் முனிராஜ் தலைமை தாங்கினார். இதில் கட்சியினர் பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.