திண்டுக்கல்லில் சாலை பணியாளர்கள் வெள்ளை கொடி ஏந்தி போராட்டம்


திண்டுக்கல்லில் சாலை பணியாளர்கள் வெள்ளை கொடி ஏந்தி போராட்டம்
x

திண்டுக்கல்லில் சாலை பணியாளர்கள் வெள்ளை கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் வெள்ளை கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கோட்ட தலைவர் ராஜா தலைமை தாங்கினார். செயலாளர் சீனிவாசன் வரவேற்றார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முபாரக்அலி போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

இதில் மாநில துணை தலைவர் மாணிக்கம், கோட்ட பொருளாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக அறிவித்து அரசாணை வௌியிட வேண்டும். மேலும் ஊதியத்தில் 10 சதவீதத்தை ஆபத்து படியாக வழங்க வேண்டும். அதேபோல் பணி காலத்திலும், பணி நீக்க காலத்திலும் இறந்த சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதேபோல் பழனி நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு சங்கத்தின் கோட்ட தலைவர் நந்தகோபால் தலைமை தாங்கினார். செயலாளர் மணிமாறன், பொருளாளர் வீரய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.


Next Story