கலெக்டர் அலுவலகத்தில் சமையல் செய்து கிராமமக்கள் போராட்டம்
கிராமத்தில் உள்ள பொதுப்பாதையை தனிநபர் ஆக்கிர மித்ததை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் சமையல் செய்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராமத்தில் உள்ள பொதுப்பாதையை தனிநபர் ஆக்கிர மித்ததை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் சமையல் செய்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுப்பாதை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அடுத்த இ. சுந்தனேந்தல் கிராமத்தில் வசிக்கும் மக்கள் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு கியாஸ் சிலிண்டர் 'அடுப்பு' சமையல் பாத்திரங்களுடன் வந்தனர்.
அவர்கள் தங்கள் கிராமத்தில் உள்ள பொதுப்பாதையை தடுத்து தனிநபர் ஆக்கிரமித்து உள்ளதாகவும் அந்த ஆக்கிரமிப்பை அகற்றும் வரை கலெக்டர் அலுவலகத்தின் வாசலில் அமர்ந்து சமையல் செய்து சாப்பிட்டுவிட்டு காத்திருக்கும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுபற்றிய தகவல் அறிந்ததும் கலெக்டர் அலுவலக சிரஸ்தார் ரமேஷ், இளையான்குடி தாசில்தார் அசோக் குமார் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.