தர்மபுரியில் மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


தர்மபுரியில் மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Oct 2022 12:15 AM IST (Updated: 12 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரியில் மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் விஜயன் முன்னிலை வகித்தார்.

மின்வாரிய துறையை தனியார் மயமாக்க கூடாது. கடந்த ஜனவரி மாதம் முதல் அகவிலைப்படியை 3 சதவீதம் வழங்க வேண்டும். ஒப்பந்த பணி காலத்தில், 50 சதவீதம் கணக்கில் எடுத்து ஓய்வூதியம் திருத்தம் செய்து வழங்க வேண்டும்.

மருத்துவ காப்பீடு

மின்சார மசோதா 2022-ஐ அமல்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்திலுள்ள குறைபாடுகளை நீக்கி, பணமில்லா மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 70 வயது பூர்த்தியடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மின்வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு, கோரிக்கை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


Next Story