இந்தி திணிப்பு, ஒரே பொது நுழைவு தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்-மாவட்ட செயலாளர்கள் தலைமையில் நடந்தது


இந்தி திணிப்பு, ஒரே பொது நுழைவு தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்-மாவட்ட செயலாளர்கள் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 16 Oct 2022 12:15 AM IST (Updated: 16 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

இந்தி திணிப்பு மற்றும் ஒரே பொது நுழைவு தேர்வு திட்டத்தை மத்திய அரசு கைவிட கோரி தர்மபுரியில் தி.மு.க. இளைஞர், மாணவர் அணி சார்பில் மாவட்ட செயலாளர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டம்

தர்மபுரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி, மாணவரணி சார்பில் மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாடு முழுவதும் ஒரே பொது நுழைவு தேர்வு திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தடங்கம் சுப்பிரமணி, மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் ஆகியோர் தலைமை தாங்கினார். இளைஞரணி அமைப்பாளர் சந்திரமோகன், மாணவரணி அமைப்பாளர் சக்திவேல் ஆகியோர் வரவேற்றனர்.

தலைமை செயற்குழு உறுப்பினர்கள் எம்.ஜி.சேகர், தர்மச்செல்வன், சென்னகிருஷ்ணன், சித்தார்த்தன், பி.சி.ஆர்.மனோகரன், மாவட்ட அவைத் தலைவர்கள் மனோகரன், செல்வராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் வக்கீல் ஆ.மணி, உமாசங்கர், ஆறுமுகம், ரேணுகாதேவி, கிருஷ்ணகுமார், ராஜகுமாரி, மாவட்ட பொருளாளர்கள் தங்கமணி, முருகன், பொதுக்குழு உறுப்பினர்கள் சோளைமணி, நடராஜன், வேலுமணி, சேகர், சரசுவதி துரைசாமி, வாசுதேவன், லட்சுமணன், தேவேந்திரன், மோகன், சையத்முர்த்துஜா, கலைவாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோஷங்கள்

இந்தியை திணிக்கும் மத்திய அரசின் முடிவை உடனே திரும்ப பெற வேண்டும். நாடு முழுவதும் ஒரே பொது நுழைவு தேர்வு நடத்தும் மத்திய அரசின் முடிவை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழகத்தில் மதவாதத்தை திணிக்கும் மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள், இளைஞர் மற்றும் மாணவரணியினர் பதாகைகள் ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் சேட்டு, ஏ.எஸ்.சண்முகம், வைகுந்தன், மல்லமுத்து, கருணாநிதி, செல்வராஜ், சபரிநாதன், மடம் முருகேசன், மாது, முத்துகுமார், சரவணன், செங்கண்ணன், ரத்தினவேல், நெப்போலியன், சிவபிரகாசம், சவுந்தரராசு, வேடம்மாள், முனியப்பன், அன்பழகன், கிருஷ்ணன், கோபால், பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி, இலக்கிய அணி அமைப்பாளர் பொன்மகேஸ்வரன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் முத்துலட்சுமி, தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் கவுதமன், நல்லம்பள்ளி ஒன்றிய குமு துணைத்தலைவர் பெரியண்ணன், சப்தகிரி கல்லூரி நிர்வாகி எம்.ஜி.எஸ்.வெங்கடேஸ்வரன், முன்னாள் நகர பொறுப்பாளர் அன்பழகன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் செல்லதுரை, மகேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தர்மபுரி நகர செயலாளர் நாட்டான் மாது நன்றி கூறினார்.


Next Story