வேப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்


வேப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x

வேப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே உள்ள வேப்பத்தூர் பேரூராட்சியில் சாதாரண மன்ற கூட்டம் தலைவர் அஞ்சம்மாள் தலைமையில் நேற்று நடைபெற்றது கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பா.ஜ.க. கவுன்சிலர் சந்திரசேகர், அ.தி.மு.க. கவுன்சிலர் யாகப்பன், மேனகா, கோவிந்தன், சுயேச்சை ராஜதுரை, வி.சி.க. காமராஜ் உள்ளிட்ட 6 கவுன்சிலர்களும் பேரூராட்சி நிர்வாக குளறுபடிகளை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story