மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி சமத்துவ மக்கள் கட்சியினர் திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி திண்டுக்கல் கல்லறை தோட்டம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் என்.எஸ்.நாதன் தலைமை தாங்கினார்.
இதில், மாநில வக்கீல் அணி துணைச்செயலாளர் செல்வம், தேனி மாவட்ட செயலாளர்கள் முருகன், காமராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் சேகர், மேற்கு மாவட்ட செயலாளர் சாமுகமூர்த்தி, மாவட்ட பொருளாளர் தேவேந்திரன், மாவட்ட துணை செயலாளர் கார்த்திக் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள், பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story