தர்மபுரியில்பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி மாவட்ட பா.ஜனதா விவசாய அணி சார்பில் தமிழக அரசை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பா.ஜ.க. விவசாய அணி தலைவர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் சிவன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் வெங்கட்ராஜ், ஐஸ்வர்யம் முருகன், பிரவீன், மாவட்ட விவசாய அணி பொதுச்செயலாளர்கள் விஜயகுமார், மாரியப்பன், சரவணன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
மாவட்ட தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஏ. பாஸ்கர் சிறப்பு அழைப்பாளராக கடந்து கலந்து கொண்டு பேசினார். பொங்கல் பரிசுத் தொகுப்போடு கரும்பு, வெல்லம் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்ககைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட விவசாய அணி துணை தலைவர்கள் சித்துராஜ், முருகன், முத்துக்குமரன், மாதையன், விஜயன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட விவசாய அணி பொருளாளர் ராமன் நன்றி கூறினார்.