கவர்னர் வருகையை கண்டித்துதஞ்சையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்


கவர்னர் வருகையை கண்டித்துதஞ்சையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
x

கவர்னர் வருகையை கண்டித்து தஞ்சையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம் திருவையாறில் நடந்த ஆராதனை விழாவில் பங்கேற்பதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தஞ்சை வந்தார். தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் தமிழ்நாடு என்று கூறாமல் பாதியிலேயே வெளியேறியதை கண்டித்தும், தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக கூறியும், அவரை திரும்பி போக வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் தஞ்சை ரெயில் நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருப்பு கொடியுடன் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல்அஜீஸ் தலைமை தாங்கினார். ரியாஸ், தஞ்சை தொகுதி தலைவர் ரபீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கவர்னரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 18 பேரை கைது செய்தனர்.


Next Story