தர்மபுரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி:
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் நீர்த்தேக்க தொட்டியை அசுத்தப்படுத்திய கும்பலை கண்டித்தும், இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், தமிழகத்தில் தொடர்ந்து வரும் சாதிய வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த கோரியும் தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயந்தி தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் ஜானகிராமன், மாவட்ட துணைச் செயலாளர் சக்தி, மாவட்ட பொருளாளர் மன்னன், நகராட்சி கவுன்சிலர் விஜயலட்சுமி உமாசங்கர், மாவட்ட செய்தி தொடர்பாளர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொகுதி அமைப்பு செயலாளர் சக்தி வரவேற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் நீல சந்திரசேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். தொகுதி அமைப்பு செயலாளர்கள் சாக்கன் சர்மா, தமிழ் அன்வர், கருப்பண்ணன், மாநில நிர்வாகிகள் கோட்டை கலைவாணன், கிள்ளிவளவன், ராமன், அதியமான், தீத்து, செந்தில்குமார், ஆட்டோ கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தர்மபுரி நகர தலைவர் ராமதுரை நன்றி கூறினார்.