தர்மபுரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகளை கண்டித்து தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநில துணைத்தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான தீர்த்தராமன் தலைமை தாங்கினார். நகர தலைவர் வேடியப்பன் வரவேற்றார்.
மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் நரேந்திரன், ஜெயசங்கர், சண்முகம், கிருஷ்ணன், மோகன்குமார், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் காளியம்மாள், சிறுபான்மை அணி தலைவர் முபாரக் ஆகியோர் முன்னிலை இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழ்நாட்டு அரசியலில் தலையிடும் தமிழக கவர்னரை மத்திய அரசு உடனே மாற்ற வேண்டும் என்றும், கவர்னருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் வட்டார தலைவர்கள் மணி, ஞானசேகர், காமராஜ், வேலன், வஜ்ஜிரம், பெரியசாமி, ராஜேந்திரன், சிலம்பரசன், வெங்கடாசலம், சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.